கொரோனா நிவாரண நிதியாக தனக்கு வழங்கிய உதவித்தொகையை மாணவி வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இரண்டாவது அலையால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களும் தொழில்நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பல்வேறு பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள், சாதாரண மக்கள் வரை தங்களால் இயன்றதை கொடுத்து உதவி வருகின்றனர்.
அந்த வகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் காவ்லதுறையினர் குடும்பத்து மாணவர்களிடையே முதல் மதிப்பெண் பெற்ற அனுசயா என்ற மாணவி, அரசு தனக்கு வழங்கியுள்ள ரூ.7500 ஐ கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமாரை சந்தித்த மாணவி, ரூ.7500 ஐ அளித்தார். மாணவியின் உதவும் குணத்தை எஸ்பி விஜயகுமார் பாராட்டுக்களை தெரிவித்தார்.