தாராபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை கைது செய்த போலீசார் 450 லிட்டர் ஊறவை அழித்தனர்.
தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளிஞ்சிவாடி பகுதியில் வசித்து வருபவர் ராமமூர்த்தி தேவர். இவரது மகன் அண்ணாசாமி (வயது 58).
இவர் ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை மூகாம்பிகை நகர் இந்தியன் ஹோட்டல் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் விநாயகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற போலீஸார் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 3, லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 450 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அளித்தனர்.
பின்னர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது குறித்து அண்ணாசாமி மீது வழக்கு பதிவு செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவரை தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அண்மைக்காலமாக தாராபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுவை பதுக்கி வீடுகளில் வைத்து விற்பனை செய்யப்படுவதும் கிராம பகுதிகளில் போலி மதுபானம் தயாரிப்பதும். வாடிக்கையாகிவிட்டது.
மேலும் மே10, முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் மூலனூர் குண்டடம், அலங்கியம், தாராபுரம் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளனர்.
வீடுகளில் போலி மது விற்பவர்களை கண்காணித்தும் மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தாராபுரம் பகுதி தாய்மார்களின் வேண்டுகோளாக உள்ளது குறிப்பிடத்தக்கது