இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் 55 வயதிற்குட்பட்டவர்களை அவதானமாக இருக்குமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 36 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் அதிக மரணங்களும், கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
55 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுவாசப் பிரச்சினை போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் தாமதமின்றி வைத்தியசாலையில் செல்லுமாறு இராணுவ தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
வைத்தியசாலை செல்லாத பட்சத்தில் வைத்தியரின் ஆலோசனைகளை தாமதமின்றி பெற்றுக் கொள்ளுமாறு இராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.