மனதில் பட்டதை பொளேர் என்று போட்டு தாக்குபவர் இசைஅமைப்பாளர், நடிகர் ஜி.வி. பிரகாஷ்.
ஜல்லிகட்டு விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே தனது ஆதரவையும், கருத்தையும் வலுவாக பதிவு செய்து வருகிறார்.
திரிஷா கர்ஜனை படபிடிப்பில் இருந்த போது சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராடினர். காரணம் த்ரிஷா பீட்டா அமைப்பில் இருக்கிறார்.
அவர் மீது யாரும் தாக்குதல் நடத்தவும் இல்லை. கண்டனம் தெரிவித்தார்கள் அவ்வளவே.
திரிஷா அடிபட்டதாக கருதிய நடிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துகள் கூறினார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்திய இயக்குனர் வ. கவுதமன் போலீசால் அடிபட்டார்.
இதற்கு சீமான் போன்ற ஓரிருவர் மட்டுமே கண்டனம் தெரிவித்தனர். எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை.
இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக் கூறிய ஜி.வி.பிரகாஷ் நடிகைகளுக்கு ஒன்று என்றால் ஹீரோக்கள் பொங்கி எழுவார்கள்.
இயக்குனருக்கு எந்த ஹீரோவும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றார்.இதற்கும் எந்த ஹீரோவும் வாய் திறக்கவில்லை என்பது தான் ஹை லைட்.