வவுனியாவில் கிராமங்களில் வசிக்கும் 12 பெண்கள் உட்பட 20 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.
அதில், மாமடு பகுதியில் மூன்று பேருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், காத்தார் சின்னக்குளம் பகுதியில் இருவருக்கும், ஓமந்தை நவ்வி பகுதியில் நான்கு பேருக்கும், சூடுவெந்தபுலவு பகுதியில் ஒருவருக்கும், மூன்று முறிப்பு பகுதியில் ஒருவருக்கும், கோதாண்டார் நொச்சிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், கல்மடு முள்ளிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், பூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் இருவருக்கும் எனக் கிராமங்களைச் சேர்ந்த 12 பெண்கள் உட்பட 20 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.