விவோ Y52 5G என்ற மற்றொரு மலிவு விலையிலான 5ஜி-இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனை விவோ அறிமுகம் செய்துள்ளது. இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 700 SoC உடன் வருகிறது, இதே சிப்செட் தான் ரியல்மீ 8 5ஜி போனிலும் உள்ளது. மற்ற சிறப்பு அம்சங்களில் 5,000 mAh பேட்டரி, மூன்று கேமராக்கள் போன்ற பல அம்சங்கள் உள்ளன.
விவோ Y52 5 ஜி அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் முழு HD+ (1080 x 2408 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC உடன் 4 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக இதை மேலும் விரிவாக்கமுடியும்.
ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் OS 11.1 உடன் இயங்கும் விவோ Y52 5ஜி 5,000 mAh பேட்டரியை 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கொண்டுள்ளது.
மேலும், இதோடு ஒரு மூன்று கேமரா அமைப்பு உள்ளது, அதில் 48MP முதன்மை சென்சார், 2MP மேக்ரோ ஷூட்டர் மற்றும் மற்றொரு 2MP லென்ஸ் ஆகியவை உள்ளது. முன்பக்கத்தில், 8MP செல்ஃபி ஷூட்டர் இடம்பெறுகிறது.
இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, விவோ Y52 5ஜி வைஃபை, புளூடூத், GPS, 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. கடைசியாக, இது பாதுகாப்புக்காக ஒரு பக்க கைரேகை சென்சாரையும் கொண்டுள்ளது.
விவோ Y52 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை
விவோ Y52 5ஜி போனுக்கான விலையை இந்த பிராண்ட் இன்னும் அறிவிக்கவில்லை. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது; இருப்பினும், சாதனம் பிற ரேம் / சேமிப்பக விருப்பங்களுடன் வருமா என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை இல்லை. விவோ Y52 5ஜி விவோ Y72 5ஜி போன்ற சில அம்சங்களையும் வடிவமைப்பையும் வழங்குவதால், விலையும் விவோ Y72 5ஜி மாடல் போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவோ Y52 போனின் விலை சுமார் ரூ.25,000 ஆக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.