இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா மீளவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட்டிற்கான நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
தலைமைப் பதவிக்கு வேறு எவரும் போட்டியாத காரணத்தினால் போட்டியின்றி ஷம்மி சில்வா இவ்வாறு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் தவிசாளரான ஷம்மி, இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மதிவாணன், நிசாந்த ரணதுங்க மற்றும் பந்துல வர்ணபுர ஆகியோர் இறுதி நேரத்தில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டிருந்தனர்.
இரண்டாண்டு கால பதவிக்காலத்திற்காக ஷம்மி சில்வா இரண்டாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.