கொரோனா காலகட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக மதுரை கண் மருத்துவர் உஷா எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பரவியுள்ள நிலையில் மதுரையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் பிரபல கண் மருத்துவர் உஷா தெரிவித்துள்ளதாவது, கருப்பு பூஞ்சை நோய் குறித்து யாரும் அச்சப்பட, பயப்பட தேவையில்லை. இந்த நோய் தாக்குதல் நீண்ட காலமாக உள்ளது.
கட்டுப்படுத்தாத சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் வரும், கண் வீக்கம், கண் வலி, ஒத்தை தலைவலி, மூக்கில் ரத்தம் ஆகியவை கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்.
கொரோனா காலகட்டத்தில் கருப்பு பூஞ்சை தாக்குதல் அதிக அளவில் உள்ளன. கருப்பு பூஞ்சை நோய் எல்லோருக்கும் வராது. கருப்பு பூஞ்சை நோய் படிப்படியாக கண் பார்வையை இழக்க செய்யும். ஆரம்பத்தில் சிகிச்சை எடுத்தால் நோயில் இருந்து மீண்டு விடலாம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என தெரிவித்தார்.