பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சர்யப்படுத்தும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டி லாபத்தைப் பெருக்குவீர்கள்.
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத பணவரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் சிலர் நாடிவந்து உதவிசெய்வர். பொல்லாதவர்கள் உங்களைவிட்டு விலகுவர். புதிய பாதை புலப்படும்.
யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காலையில் செய்ய மறந்த வேலை ஒன்றால் மாலையில் அவதிப்படலாம்.
மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. வருமானம் திருப்தி தரும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆயினும் விரயங்களும் கூடுதலாக இருக்கும். விரும்பிய காரியமொன்று விலகிச் செல்லலாம். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்பு உண்டு.
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொகை கேட்ட இடத்தில் இருந்து வந்துசேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் உறுதுணை புரிவர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும்.
தொலைபேசி வழித் தகவல்களால் மகிழ்ச்சி அடையும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சர்யப்படுவர். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படலாம்.
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். நீண்ட நாளைய பிரச்சினையொன்று சுமுகமாக முடியும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.