இந்திய அணியின் இளம் வீரரான கே.எல் ராகுதல் டெஸ்ட் அணியில் தனக்கு வாய்ப்பு கொடுத்தால், சிறப்பாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
உலக அளவில் தரமான கிரிக்கெட் அணியை கொண்டுள்ள அணிகளில் இந்தியாவும் ஒன்று, அந்தளவிற்கு இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.
இதனால் ஒரு தொடரில் சொதப்பிவிட்டால், அடுத்து அந்த வீரர் வேறொரு தொடரில் விளையாடுவது சந்தேகம் தான், ஏனெனில் அடுத்து வரும் வீரர் சிறப்பாக விளையாடி அந்த இடத்தை தக்க வைத்து கொள்வார்.
அது போன்ற நிலையில் தான் இப்போது கே.எல்.ராகுல் உள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான கே.எல்.ராகுல், புஜாரா போன்று ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்டார்.
ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் சொதப்ப, டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து, இந்திய அணியில் டி20 மற்றும் ஒருநாள் அணியில் நிரந்த இடம் பிடித்தார்.
இருப்பினும் டெஸ்ட் அணியில் இவரால் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை. இவர் பார்ம் அவு ஆனவுடன், இந்திய அணிக்குள் வந்த ப்ரித்திவ் ஷா சில போட்டிகளிலும், சுப்மன் கில் சிறப்பாகவும் விளையாட, ரோகித்சர்மாவின் வருகையும் இவருடைய டெஸ்ட் கரியரையே கேள்வி குறியாக்கியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள கே.எல்.ராகுல், டெஸ்ட் போட்டியில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால், துவக்க வீரராக களமிறக்கினால், என்னால் நிச்சயமாக சிறப்பாக விளையாட முடியும், 300 ஓட்டங்களை குவிக்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் மற்றும் கருண் நாயரின் சாதனையை தன்னால் முறியடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.