மும்பை அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 600க்கும் மேற்ட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களை கடற்படையினர் உயிருடன் மீட்ட நிலையில் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
டவ் தே புயலால் மும்பை – குஜராத் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பல் கடலில் மூழ்கியது. 600க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்கள் அந்த கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இதில் புயலால் எண்ணெய் நிறுவனத்தின் டிரில் கப்பலில் பழுது ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான ஊழிர்கள் பல மணி நேரம் கடலுக்குள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.
அப்போது இன்னொரு கப்பலும் கடலில் மூழ்கியது. கடற்படையின் இரண்டு போர்க்கப்பலகளாக கொல்கத்தாவும் கொச்சி ஹெலிகாப்டரும் கடலில் சிக்கியவர்களை மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட அனைவரும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ளோர தேடும் பணியில் மூன்று கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.