கொரோனா வைரஸால் தமிழகத்தில் பலரும் இறந்து வருகின்றனர். அந்த வகையில், புதுமணப்பெண்கள் கொரோனா விழிப்புணர்வு இன்றி விருந்து சென்றதால் ஒரே வாரத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி(19). இவருக்கு, தண்டூர் கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த நாட்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது.
இந்த நிலையில், உறவினர் வீடுகளுக்கு விருந்திற்கு சென்று வந்த புதுமண தம்பதிகள் வீடு திரும்பிய நிலையில் புதுமணப்பெண் ஸ்ரீவானி திடீரென மயக்கம் அடைந்து தரையில் சாய்ந்தார்.
இதனையடுத்து, உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஸ்ரீவாணி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு கொரோனா காரணமாக இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் கூறினாலும், திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்ததாக உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், ஸ்ரீவானி தூக்கமின்மை காரணமாக ரத்தக்கொதிப்பில் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
திருமணத்திற்காகப் போடப்பட்ட பந்தலைப் பிரிப்பதற்குள் அதே பந்தலில் எங்கள் மகளுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நிலைக்கு வந்து விட்டோமே என அவரது பெற்றோர் கதறித் துடித்தது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.