ஒரு ஆண்டுக்கும் மேலாக நாடு கோவிட் தொற்று நெருக்கடியை எதிர்நோக்கி வந்துள்ள போதிலும் பொது சுகாதாரத்துறையில் மனித ஆற்றல் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தவறிவிட்டதாக சுகாதாரத்துறையின் முன்னாள் துணையமைச்சர் டாக்டர் Lee Boon Chye ( லீ பூன் சாய் ) சாடினார்.
கோவிட் தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிவதற்கான தனது ஆற்றலை அரசாங்கம் மேம்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடரபில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை பரிசோதித்து 48 நேரத்திற்குள் தனித்து வைக்கப்பட்டால் கோவிட் தொற்று பரவலை விரைவாக தடுக்க முடியும் என டாக்டர் Lee Boon Chye கூறினார்.
கோவிட் தொற்றை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஆக்கப்பூர்வமான ஒரே வழி தொற்றுக்குள்ளானவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதுதான். இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெத்தனப் போக்கு காட்டுப்படுவது குறித்து அவர் தமது ஏமாற்றத்தை தெரிவித்தார். தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிவதற்காக 10,000 தொழிலாளர்களை நியமிக்கும்படி ஏற்கனவே சுகாதார அமைச்சை டாக்டர் Lee Boon chye கேட்டுக்கொண்டிருந்தார்.