அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் கவனக்குறைவால் ஆஸ்திரியாவில் உள்ள 82 வயது முதியவரின் கால் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளது.
அம்முதியவர் பல வகையான நோய்களுக்கு ஆளானதையடுத்து அவரின் வலது காலை நீக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறியிருந்தனர். அதன்படி கடந்த மே 18ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
ஆனால், துரதிஷ்டவசமாக அம்முதியவரின் வலது காலுக்குப் பதிலாக ஆரோக்கியமான நிலையில் இருந்த இடது காலை சம்பந்தப்பட்ட மருத்துவர் நீக்கிய சம்பவம் முதியவரின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் செய்த தவறுக்காக வருந்துவதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட அந்நபரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாகவும் கூடிய விரைவில் அகற்ற வேண்டிய இடது காலுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் அம்மருத்துவமனையின் தலைமை இயக்குநர் Norbert Fritsch தெரிவித்துள்ளார்.