சிலாங்கூரில் அதிகரித்துவரும் கோவிட் தொற்றையடுத்து மாநில அரசாங்கம் ஏற்பாட்டில் மே 8ஆம் தேதி முதல் கோவிட் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 16 தொகுதிகளில் Skim Peduli Sihat திட்டத்தின் கீழ் இலவசமாக நடத்தப்பட்ட இச்சோதனையில் கலந்துகொள்வதற்கு சுமார் 20,000த்திற்கும் மேற்பட்டோர் முன்வந்தனர். அவர்களில் 1,000த்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்று கண்ட பெரும்பாலோர் ஆரோக்கியமான நிலையில் இருந்ததாகவும் அவர்களுக்கு காய்ச்சல், வாந்தி போன்ற முதல்கட்ட அறிகுறிகள் ஏதும் தென்படவில்லையென்றும் Selcare இயக்க நிர்வாகி Mohd Noor Md Nasir கூறினார்.
ஹரிராயாவுக்குப் பிறகு சிலாங்கூரில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்னும் சோதனை மேற்கொள்ளாத பலருக்கும் தொற்று பரவியிருக்கக்கூடும். இந்நிலையில் தொற்றின் அறிகுறிகள் தென்படாத நிலையில் தொற்றுப் பரவலின் வீரியம் பல மடங்காக இருக்கும் அபாயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.