முகத்தில் தோன்றும் பருக்கள் முகப் பொலிவை அப்படியே தலைகீழாக மாற்றிவிடும். இதற்கு என்ன தான் அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் அவை ஒரு நிரந்தர தீர்வை கொடுப்பதில்லை.
ஆனால் சில இயற்கை வழிகள் எந்தவித பக்கவிளைவும் இன்றி நல்ல ஒரு தீர்வை கொடுக்கும். அதில் ஒன்று தான் கிராம்பு ஃபேஸ் பேக். இது பருக்களை முற்றிலும் நீக்குவதோடு, பருக்களால் ஏற்படும் தழும்புகளையும் முற்றிலும் மறைக்கும்.
செய்முறை:
பாதி ஆப்பிளை எடுத்து தோலுரித்து, துண்டுகளாக்கி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ இலைகளை சேர்த்து 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 டீ ஸ்பூன் ஆப்பிள் பேஸ்ட் மற்றும் 1 டீ ஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து நன்கு கலந்து, அதோடு 1 துளி கிராம்பு எண்ணெய் சேர்க்க வேண்டும்.
பிறகு அதில் 1 டீ ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். தேனில் உள்ள அமினோ அமிலம் மற்றும் வைட்டமின் சி, சரும செல்களுக்கு புத்துயிர் கொடுக்கும்.
அடுத்து முகத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
மாஸ்க் நன்கு காய்ந்த பின், சிறிது நீரைத் தெளித்து, மென்மையாக 2 நிமிடம் ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இறுதியில் முகத்தை துணியால் துடைத்துவிட்டு, சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால் முகத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் விரைவில் மறையும்.