தெலுங்கு திரையுலகின் முன்னணி பிஆர்ஓவாக இருந்து வந்த பிஏ ராஜு திடீரென காலமானது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களான மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்பட பலருக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தவர் பி.ஏ.ராஜு. மேலும் விஷால் உள்பட ஒருசில தமிழ் நடிகர்களுக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தார்.
அதுமட்டுமின்றி சினிமா பத்திரிகையாளராகவும் திரைப்படங்களின் புரமோஷன்களையும் சிறப்பாக கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக பி.ஏ.ராஜு காலமானார். இவரது மறைவு செய்தியைக் கேட்டு முன்னணி நடிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, தேவிஸ்ரீபிரசாத், தமிழ் நடிகர்கள் விஷால், விக்ரம் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பிஆர்ஓ ராஜு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.