தனது அப்பா தன்னை சரியாக வளர்க்கவில்லை என்றும், ஏன் என்றால் அவரது வளர்ப்பு அப்படி தான் என்று, TV நிகழ்ச்சிக்கு இளவரசர் ஹரி கூறியுள்ள விடையம். நேரடியாகவே பிரித்தானிய மகாராணியாரை தாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. என்னை அப்பா(சார்ளஸ்) சரியாக வளர்க்கவில்லை, என்னை அவர் ஒரு மகனாக கூட கருதவில்லை. இதனால் நான் போதைப் பழக்கத்திற்கு கூட அடிமையாகினேன் என்று ஹரி தெரிவித்துள்ளார். அப்பாவை சரியாக வளர்த்திருந்தால், அவர் இப்படி தனது மகனுக்கு செய்திக்க மாட்டார் என்று , ஹரி கூறிய விடையத்தை கேள்விப் பட்ட மகாராணியார் பெரும் சோகமடைந்ததாக அரன்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள்… கடந்த 300 வருடங்களில்….
பிரித்தானிய அரச குடும்பத்தை யாரும் இந்த அளவு இழிவுபடுத்தியதே இல்லை என்றும் கூறப்படுகிறது. TV நிகழ்ச்சி ஒன்றிற்காக மில்லியன் கணக்கான டாலர்களை வாங்கிக் கொண்டு, ஹரி அவர்கள் கொடுத்து வரும் பேட்டி, அரச குடும்பத்தை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நாள் வரை அங்கத்தவர்களை மட்டுமே தாக்கி வந்த ஹரி தற்போது, மகாராணியாரின் தலையிலும் கை வைத்துள்ளார். இதனால் பிரித்தானிய மக்கள் பொங்கி எழுந்துள்ளார்கள். பலர் ஹரி மீது கடும் அதிருப்த்தியடைந்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஏதோ ஒரு வகையில் செயல் இழக்கச் செய்ய , பிரித்தானிய உளவுத்துறை தனது வேலையைக் காட்ட ஆரம்பிக்கும் என்று இனி எதிர்பார்கலாம். எதற்கும் ஒரு எல்லை உண்டு. மகாராணியாரை இழிவு படுத்த, அதனை பார்த்துக் கொண்டு உளவுத்துறை இருக்காது.