சிறுநீர் கழிக்கும் எரிச்சல் ஏற்படும் உணர்வு பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளது.
உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தல் போன்றவையால் சிறுநீர் குழாய் தொற்று ஏற்பட்டு எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
இந்த சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டாகும் பிரச்சனைக்கு, தகுந்த சிகிச்சை அளிக்காமல் போனால் அது உயிருக்கே ஆபத்தை அளிப்பதாக கூட மாறலாம்.
உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்.
தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது.
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும்.
இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். எலுமிச்சை ஜூஸ் குடித்தாலும் இதற்கு தீர்வு கிடைக்கும்