சினியுலகின் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி,அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்துள்ளார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளம். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நிறைய பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறார்.சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதனை உறுதிப்படுத்தி, அவரே இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
ஆண் குழந்தைக்கு தாயானார் பாடகி ஸ்ரேயா கோஷல்..!
Loading...
Loading...
Loading...