டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் சற்று குறைந்த வண்ணம் இருந்தாலும், பலி எண்ணிகை ஆனது மிக மோசமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு, மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,260 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது. பல நாட்களுக்குப் பிறகு, நகரத்தில் கோவிட் இறப்புகள் 200 ஐ விடக் குறைவாக, அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 182 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் டெல்லியில் முழு ஊடரங்கு ஆனது இன்னும் ஒரு வாரத்திற்கு அதாவது, மே 31 காலை வரை அமலில் இருக்கும் என டெல்லி முதலமைச்சர் தற்போது அறிவித்துள்ளார்.
மேலும் அவர், அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் மூன்றாவது அலை தாக்கம் ஏற்படாது எனவும், எனவே அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். அது மட்டும் அல்லாமல், தடுப்பூசிகள் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளரார்.