இன்டெல், AMD மற்றும் NVIDIA விலிருந்து வெளியான உயர் திறன் கொண்ட CPUs மற்றும் GPUs உடன் ஓமன் 15 மற்றும் ஓமன் 16 தொடர் கேமிங் மடிக்கணினிகளை HP அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நிறுவனம் HP விக்டஸ் கேமிங் மடிக்கணினிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. விக்டஸ் பை HP 16 தொடரின் முதல் தயாரிப்பு ஆகும், இது சமீபத்திய CPU மற்றும் GPU உடன் இயங்குகிறது, இது HP ஓமன் தொடருடன் ஒப்பிடும்போது ஹெவ்லெட்-பேக்கார்ட் நிறுவனத்தின் பட்ஜெட் விலையிலான கேமிங் சாதனங்களாக இருக்கும்.
விக்டஸ் இன் HP 16 தொடரின் விவரக்குறிப்புகள்:
பெயர் குறிப்பிடுவதுபோல், Victus by HP16 லேப்டாப் 16 அங்குல டிஸ்ப்ளேவுடன் FHD (1920 x 1080p) தெளிவுத்திறனுடன் 165 Hz புதுப்பிப்பு வீத திரையுடன் வருகிறது. மடிக்கணினி இன்டெல் / AMD CPU உடன் இயங்குகிறது, இது இன்டெல் கோர் i7-11800H CPU அல்லது AMD ரைசன் 7 5800H உடன் இயங்கும் திறன் கொண்டது.
கிராபிக்ஸ் அம்சங்களைப் பொறுத்தவரையில், HP விக்டஸ் NVIDIA GeForce RTX 3060 மொபைல் அல்லது AMD ரேடியான் RX 5500M GPU உடன் இயங்குகிறது. RAM என்று வரும்போது, சாதனம் குறைந்தபட்சம் 8 ஜிபி RAM உடனும் மற்றும் அதிகபட்சம் 32 GB DDR4 RAM ஆகியவற்றை 3200 MT/s மெமரி உடன் இயங்குகிறது.
சேமிப்பக விருப்பங்களைப் பொறுத்தவரை, விக்டஸ் 1TB SSD மற்றும் மற்றொரு SSD ஸ்லாட் உடன் ரெய்டு O சேமிப்பக விருப்பங்களுக்கான ஆதரவுடன், ஆப்டிமல் ரீட் & ரைட் வேகத்தை வழங்கும்.
HP 16 விலை மற்றும் விற்பனை விவரங்கள்
Victus by HP16 அமெரிக்காவில் தற்போது கிடைக்கிறது, இந்த ஜூன் முதல் hp.com மற்றும் மூன்றாம் தரப்பு சில்லறை விற்பனையாளர்கள் வழியாக 799.99 டாலர் (தோராயமாக ரூ.58,328) விலையில் கிடைக்கிறது. விலையைப் பார்க்கையில், விக்டஸ் பை HP 16 ஒரு சிறந்த பட்ஜெட் கேமிங் லேப்டாப் ஆக இருக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் Victus by HP 16 இன் விலை நிர்ணயம் அல்லது கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.