பிளஸ்-2 பொது தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஓராண்டிற்கு மேலாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய கல்வித்துறை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியமானது என்பதால் பிளஸ் டூ தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று உறுதியாக உள்ளது.
ஆனால், கொரோனா சூழ்நிலையில் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிளஸ்-2 பொது தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை தொடங்கியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.