இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 8 பேர் பலியானதாக இத்தாலியன் ஆல்பைன் மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது.
Mottarone மலை உச்சியில் கேபிள் கார் அறுந்து விழுந்ததாக இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கேபிள் கார் Maggiore ஏரியின் கரையில் உள்ள Stresa-விலிருந்து மொட்டரோன் உச்சிக்கு பயணிக்கிறதாம்.
Stresa-விலிருந்து மொட்டரோன் உச்சிக்கு கேபிள் காரில் செல்ல சுமார் 20 நிமிங்கள் ஆகுமாம், இந்த பயணித்தின் போது நடுவில் ஒரு இடத்தில் கேபிள் கார் நிறுத்தப்படுமாம்.
அறுந்து விழுந்த கேபிள் காரில் சுமார் 11 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 8 பேர் உயிரிழந்ததாக மீட்பு பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகள் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் Turin-ல் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அணுக முடியாத பகுதியில் கேபின் கார் விழுந்ததால் மீட்பு முயற்சிகள் மிகவும் கடினமாகிவிட்டன என்றும் இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர் மற்றும் மலை மீட்பு குழுக்கள் சம்பவயிடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.