கனடாவில் பெண்ணை கத்தியால் தாக்கிய நபரை பொலிசார் சுட்டுக் கொன்றது தொடர்பில் சிறப்பு புலனாய்வு பிரிவு முன்னெடுத்துள்ளது.
Toronto-வில் உள்ள Midtown பகுதியிலே குறித்த சம்பவம் நடந்துள்ளது.
1815 யோங் ஸ்ட்ரீட், டேவிஸ்வில்லே அவென்யூவுக்கு தெற்கே நபர் ஒருவர் கத்தியுடன் திரிவதாக பொலிசாருக்கு அழைப்பு வந்துள்ளது.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் கத்தி வைத்திருந்த நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதன் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் குண்டடிப்பட்டு உயிருக்கு போராடி நிலையில் அந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் Andy Singh கூறியதாவது, விசாரணையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் காயம் ஏற்பட்டது, அந்த அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது மற்ற யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. சுடப்பட்ட மர்ம நபர் கத்தியால் பெண் ஒருவரை தாக்கிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
நபர் கத்தியுடன் திரிவதாக பொலிசாருக்கு புகார் அளித்ததே அந்த நபரின் குடும்பத்தினர் தான் என இன்ஸ்பெக்டர் Andy Singh குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தப்படவுள்ளதாகல் மேலதிக தகவல்கள் ஏதும் அளிக்க முடியாது என Andy Singh கூறினார்.
மரணம், கடுமையான காயம் அல்லது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் பொலிஸ் சம்பந்தப்பட்ட போதெல்லாம் அதை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அழைக்கப்படும்.