நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படவில்லை எனவர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான கையிருப்புக் குறித்து கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் உள்ள நேரடி இறக்குமதியாளர்களின் களஞ்சியங்களை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பார்வையிட்டார்.
நிதி உடன்படிக்கையின் கீழ் சதொச விற்பனை நிலையங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துவருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் சுகாதார வழிகாட்டல் நெறிமுறைகளைப் பின்பற்றி புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் விற்பனையாளர்கள் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என பந்துல குணர்தவன மேலும் தெரிவித்துள்ளார்.