Loading...
தமிழ்நாட்டின் அரசியல் பற்றி பேச ரஜினிகாந்துக்கு எந்த தகுதியும் இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்றும், அரசியலுக்கு வந்தால் அதை முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.
Loading...
ரஜினிகாந்தின் இந்த பேச்சுக்கு தான் நடிகர் சரத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எந்த வகையான அசாதாரண சூழல் நிலவுகிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறிய அவர், தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு ரஜினிகாந்துக்கு எந்த தகுதியுமே இல்லை என கடுமையாக சாடியுள்ளார்.
Loading...