சிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களில் Lenovo நிறுவனமும் ஒன்றாகும்.
இந்நிறுவனம் தற்போது Lenovo P2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
முதன் முறையாக ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியினை Thee எனும் மொபைல் வலையமைப்பு சேவை வழங்கிவரும் நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யவுள்ளது.
இக் கைப்பேசியின் பெறுமதியானது 199.99 பவுண்ட்ஸ்களாக இருப்பதுடன் குறித்த நிறுவனத்தின் ஊடாக மாதாந்தம் 18 பவுண்ட்ஸ்கள் எனும் தவணைக் கட்டணத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இதன் சிறப்பம்சங்களாக 5.5 அங்குல அளவுடையதும், 1080 x 1920 Pixels Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm MSM8953 Snapdragon 625 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பவற்றுடன் 32 GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 5100mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.