2017 ஒழுங்குமுறைப்படி அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. அதோடு பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வில் முறைகேடுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்வு குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-ஜூன் 14ஆம் தேதி ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு நடத்தப்படும். 2017 ரெகுலேஷன்படி இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14-ம் தேதி முதல் தொடங்கும். பணம் கட்டாமல் இருக்கும் மாணவர்கள் வரும் 3-ம் தேதிக்குள் பணம் கட்டலாம்.ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் பணம் கட்டத்தேவையில்லை. மாணவர்களின் நலன் கருதி தான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்றார்.