அமெரிக்காவில் 15 வயது சிறுமியை ஒரே நாளில் மூன்று முறை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோரி டியன் கோட்ஸ் (44) என்ற நபருக்கு இந்த தண்டனையை ஸ்டபோர்ட் கவுண்டி சர்குட் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கோரி கடந்தாண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி வீடு ஒன்றில் 15 வயது சிறுமியுடன் இருந்தார். அப்போது சிறுமியின் உடையை களைந்து அவரிடம் தவறாக நடந்து கொண்டார்.
இது போன்று செய்யாதீர்கள், நிறுத்துங்கள் என சிறுமி கூறியும் கோரி கேட்கவில்லை. அதே நாளில் மேலும் இருமுறை சிறுமியை கோரி வன்கொடுமை செய்துள்ளான்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் கூறிய நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் கோரியை அப்போது கைது செய்தனர்.
தன் மீதான குற்றத்தை கோரி மறுத்த நிலையில் டி.என்.ஏ பரிசோதனையில் அவர் சிக்கி கொண்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையிலேயே அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.