அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு பத்திரங்களை சமர்பிக்கும் போது, குறித்த அபிவிருத்தி சார்ந்துள்ள அமைச்சின் ஊடாக சமர்பிக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
அண்மைக்காலமாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் இருக்கும் போது, அவ்வமைச்சு சார்ந்த அபிவிருத்தி திட்டங்களை பிரதமரும் அவரின் கீழ் இருந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சரவை உப குழுவும் அமைச்சரவைக்கு சமர்பித்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே ஜனாதிபதி பிரதமருக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் குறித்த அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளதாகவும் அதனை மையப்படுத்தியே ஜனாதிபதி பிரதமருக்கு இதனை அறிவித்துள்ளதாகவும் அதன்படி எதிர்வரும் நாட்களில் வழமையான அணுகுமுறை பின்பற்றப்பட்டு அந்தந்த விடய அமைச்சர்கள் அமைச்சரவை பத்திரத்தை சமர்பிப்பர் எனவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.
இது முறுகலின் ஆரம்பமா என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.