Loading...
திருகோணமலையில் கடலுக்கு சென்ற நிலையில் மூன்று மீனவர்கள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில், நேற்று முன்தினம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரே கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயதான விஜேந்திரன் சஞ்சீவன், சிவசுப்ரமணியம் நதுர்சன்,மற்றும் 34 வயதான ஜீவரெட்ணம் சரண்ராஜ் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
Loading...
இதேவேளை, வானிலை நிலவரம் குறித்த தகவல்கள் தமக்கு கிடைக்காமையாலும், கொவிட் அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள வறுமை காரணமாகவுமே குறித்த மீனவர்கள் கடலுக்கு சென்றதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
காணாமல் போன குறித்த மீனவர்களை மீட்க ஸ்ரீலங்கா கடற்படையினர் தமக்கு உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading...