தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எத்தனையோ வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் ஒருசில கதாபாத்திரங்களில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். அப்படி நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் ஒன்றுதான் விலைமாது வேடம்.
ஆனாலும் ஒருசில நடிகைகள் துணிச்சலாக இந்த வேடத்தில் நடித்து தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இந்த கதாபாத்திரத்தை நடிகை ஸ்ரீபிரியா, சரண்யா பொன்வண்ணன், சினேகா, அனுஷ்கா, சங்கீதா ஆகியோர் துணிச்சலாக எடுத்து நடித்து தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது தன்ஷிகாவும் களமிறங்கியிருக்கிறார். இவர் சினிமாவில் இல்லாமல் குறும்படம் ஒன்றில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த குறும்படத்திற்கு ‘சினம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆவணப்பட இயக்குனரான பெங்காலி நடிகை பிடிட்டா பேக்கும் தன்ஷிகாவுடன் இணைந்து விலை மாதுவாக நடித்துள்ளார்.
இந்த குறும்படத்தை லண்டனில் வசிக்கும் நேசன் திருநேசன் தயாரிப்பில் ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார். இதற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த குறும்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, மேற்கு வங்காளத்தில் வாழும் ஒரு விலை மாதுவை சந்திக்கிறார் ஒரு ஆவணப்பட இயக்குனர். அந்த பெண் அந்த தொழிலில் தள்ளப்பட்ட காரணத்தை அறிந்துக்கொள்ளும் இயக்குனர் இறுதியில் யாரால் அவள் இந்த நிலைக்குள்ளானாள் என்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள்.
கதைப்படி இருவரும் பெண்ணை கடவுளாக வணங்கும் மதத்தை சார்ந்தவர்கள். அண்டை மாநிலத்திலிருந்து வந்த பெண் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டாள், ஒரு பெண் சமுகத்தில் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகளை விளக்கும் குறும்படம்தான் ‘சினம்’ என்றா