தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் காட்டுத்தீ போல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த ‘பீட்டா’ அமைப்பில் நடிகை திரிஷா இருப்பதை கண்டித்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிஷா கலந்துகொண்ட படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அந்த படப்பிடிப்பை நடத்தவிடாமல் செய்தனர்.
திரிஷாவும் தன் பங்குக்கு தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை என்று கருத்து தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திரிஷாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது, சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
இதனால் மனமுடைந்த திரிஷா, டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார். தற்போது, அவருடைய டுவிட்டர் பக்கம் செயலிழந்து போயுள்ளது. திரிஷாவின் இந்த முடிவு தொடருமா? அல்லது ஜல்லிக்கட்டு விவகாரம் முடிந்த பிறகு மீண்டும் அவர் டுவிட்டர் பக்கத்துக்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.