உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் கேப்டன்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார வாரியமாக வலம் வரும் பிசிசிஐ, வீரர்களுக்கு சம்பளத்தை வாரி இறைக்கிறது.
அதன்படி, கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் பெறும் நபராக விராட் கோஹ்லியே இருப்பார் என பலரும் நினைத்திருக்கலாம்.
ஆனால் உண்மை அதுவல்ல. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட், விராட் கோஹ்லியை விட அதிக சம்பளம் பெறுகிறார் என தெரியவந்துள்ளது.
இந்தப்பட்டியலில் கோஹ்லி, 2 ஆம் இடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லி, பிசிசிஐயின் ஏ பிளஸ் கிரேடு பட்டியலில் உள்ளார். அவருக்கு ஆண்டு ஊதியமாக ரூ.7 கோடியை பிசிசிஐ வழங்குகிறது.
அதேவேளையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட். ஆண்டுக்கு ரூ.8.97 கோடி சம்பளமாக பெறுகிறார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளமாக பெறுகிறார்.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி தலைவர் டியன் எல்கர் 3.2 கோடியை சம்பளமாக பெறுகிறார்.
மற்ற ஆசிய அணிகள் என எடுத்து கொண்டால் பாகிஸ்தானின் பாபர் அசாம் ரூ 62.40 லட்சத்தை சம்பளமாக பெறுகிறார். இலங்கை தலைவர் திமுத் கருணரத்னே 51 லட்சத்தை சம்பளமாக பெறுகிறார்.