டெக்னோ இன்று (மே,25) இந்தியாவில் ஸ்பார்க் 7 புரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் கிடைக்கிறது. அவை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.10,999 விலையில் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 64 ஜிபி மாடலில் கிடைக்கிறது.
டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ என்பது ஸ்பார்க் 7 மற்றும் ஸ்பார்க் 7P க்குப் அடுத்ததாக ஸ்பார்க் 7 வரிசையில் மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆகும். இது ஆல்ப்ஸ் ப்ளூ, ஸ்ப்ரூஸ் கிரீன் மற்றும் மேக்னட் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
இது மே 28 முதல் அமேசான் இந்தியா தளத்தில் வாங்க கிடைக்கும்.
டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ விவரக்குறிப்புகள்
டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ 720 x 1600 ரெசல்யூஷன் உடன் 6.6 அங்குல முழு HD+ டிஸ்ப்ளே, 90 Hz புதுப்பிப்பு வீதம், 20:9 திரை விகிதம் மற்றும் 89% திரை-முதல்-உடல் விகிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சாதனம் மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச்-ஹோல் கட்அவுட்டையும் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, ஆழம் சென்சார் மற்றும் AI லென்ஸுடன் மூன்று பின்புற கேமரா உடன் உள்ளது. இந்த சாதனம் செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார் கொண்டுள்ளது.
இது ஆன்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய HiOS 7.5 இல் இயங்குகிறது மற்றும் ஆக்டா கோர் ஹீலியோ G80 செயலி உடன் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி RAM வரை 128 ஜிபி ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டது, இது 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது
பேட்டரியைப் பொறுத்தவரை, சாதனம் 5000 mAh பேட்டரியை 10W சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுள்ளது. பயனரின் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்புக்காக பின்புறமாக கைரேகை ஸ்கேனருடன் பொருத்தப்பட்டுள்ளது.
இணைப்பு அம்சங்களில் 4ஜி VoLTE, Wi-Fi 802.11 a / b / g / n, புளூடூத் 5.0, GPS மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். பரிமாணங்களைப் பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ 164.9×76.2×8.8 மிமீ அளவுகளை கொண்டிருக்கும்.