நடிகர், நகைச்சுவை நடிகர், பாடகர், இயக்குநர் என திரைப்படத் துறையில் பல திறன்களைக் கொண்டிருந்த ராமசுந்தரன் ரெங்கன், காலமானார்.
Spanar Jaya மலாய் நாடகத்தில் ராஜூ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவரான 57 வயதான அவர், இன்று காலை கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானர்.
அவருக்கு , ஏற்கனவே இருதய பிரச்சனைக்கான உடல் நலப் பாதிப்பு இருந்தது.
ராமசுந்தரன் கலைத் துறயில் பரந்த அனுவம் கொண்டவர். வெளிநாட்டில் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவரான அவர் வெளிநாட்டுப் படங்களிலும் நடித்துள்ளார்.
Kerja Kahwin, Sini Ada Hantu , Aku Kaya The Movie , Cinta 200 Ela ஆகிய திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
Teater திரையரங்க சங்கம், கலைஞர் சங்கம், மலேசிய மூத்த கலைஞர்கள் அறவாரியம் ஆகியவற்றில் அவரது பங்கு அதிகம் இருந்தததாக, சக உள்நாட்டுகலைஞர்கள் அவருடனான நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
அவரது மறைவிற்கு கலைஞர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.