இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களான பேஸ்புக், ஸ்னாப்சாட் மற்றும் ட்விட்டர் போன்ற நிறுவனங்களும் தங்கள் தளங்களில் விளம்பரங்கள் செய்தோ அல்லது ஏதேனும் ஒரு வழிகளிலோ பணம் சம்பாதிக்க தான் முயற்சிக்கின்றன.
மிக சமீபத்தில், Alessandro Paluzzi என்ற டெவலப்பர் ட்விட்டரில் இன்ஸ்டாகிராம் குறித்து ஒரு இடுகை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பயன்படுத்துவதற்காக படைப்பாளிகளுக்கு “போனஸ்” செலுத்தபோவதாக தெரியவந்துள்ளது
சமீபத்தில், மிகப்பெரிய சமூக ஊடகங்கள் அனைத்தும் படைப்பாளர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதன்படி, பயன்பாட்டில் பிரபலமான படைப்பாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் $1 மில்லியன் வழங்குவதாக ஸ்னாப்சாட் நிறுவனம் அறிவித்திருந்தது.
அதையடுத்து, யூடியூப் ஷார்ட்ஸ் எனப்படும் அதன் குறுகிய வடிவ வீடியோ அம்சத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக Shorts Fund என்ற ஒன்றை Youtube அறிமுகம் செய்தது.
இன்ஸ்டாகிராம் தளமும் விரைவில் இது போன்ற முயற்சியை கையிலெடுக்கவிருப்பதாக இப்போது தெரியவந்துள்ளது.
இன்ஸ்டாகிராமிற்கான back-end code ஐ ஆராய்ந்து பார்க்கையில், டெவலப்பர் Paluzzi ஒரு பயன்பாட்டு அறிவிப்புத் திரையைக் கண்டுபிடித்துள்ளார். அதன்படி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் படைப்பாளர்களுக்கு அவர்கள் உருவாக்கும் ரீல்களுக்கு பண வெகுமதிகளை வழங்க முடிவுச் செய்துள்ளது உறுதியாகியுள்ளது.
மேற்கூறிய சம்பாதிக்கும் இலக்குகளை கண்காணிக்க உதவும் ஒரு டிராக்கரையும் இன்ஸ்டாகிராம் இதனுடன் இணைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அம்சங்களை இன்ஸ்டாகிராம் எப்போது அறிமுகம் செய்யும், இதில் என்னென்ன மாதிரியான அம்சங்கள் எல்லாம் இருக்கும் என்பதை அறிந்துகொள்ள Updatenews360 உடன் இணைந்திருங்கள். https://twitter.com/alex193a/status/1395862885969051651