நடமாடும் நகைக்கடையாக வலம்வந்த ஹரிநாடார், தற்போது சிறையில் இருக்கும் நிலையில், அவரது நகை பிரபல நடிகையிடம் இருப்பதாக வெளியான தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் அரசியலில் குதித்து, தனது கட்சிக்கு பனங்காட்டுப்படை என்று பெயர் வைத்தார் ஹரிநாடார்.
தன்னைக் காத்துக்கொள்வதற்கு அரசியல் பின்புலம் வேண்டும் என்று நினைத்த இவர் அரசியலில் குதித்து பெரும் அலப்பறைக் கொடுத்த நிலையில், தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகின்றார்.
மேலும் ஹரிநாடார் உடன் தொடர்பில் இருப்பதாக நடிகை வனிதா, விஜயலட்சுமி, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஆகியோரிடம் விசாரணை நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாளது.
இந்நிலையில் ஹரிநாடார் தனது நகையினை யாரிடம் கொடுத்து வைத்துள்ளார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது. இந்த கேள்விக்கு விடைஅளிக்கும் விதமாக பத்திரிக்கை பிரபலமான பயில்வான் ரங்கநாதன், நகைகள் அனைத்தும் நடிகை விஜயலட்சுமியிடமே இருக்கின்றது என்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கொதித்தெழுந்த விஜயலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் பயில்வான் ரங்கநாதனை ஒருமையில் திட்டி நாறடித்தார். இதற்கு ரங்கநாதனிடம் இருந்து என்ன பதில் வரும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.