பிரித்தானியாவில் உணவகம் ஒன்றில், சிக்கன் சாப்பிட்டு மூச்சுத் திணறால் தவித்து வந்த இளைஞனை அங்கிருந்த வெயிட்டர் சிறப்பாக செயல்பட்டு காப்பற்றினார்.
பிரித்தானியாவின் North Wales-ல் இருக்கும் இந்திய உணவகமான Bangor Tandoori-யில் கடந்த ஞாயிற்றுக் கிழமை, வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அப்போது அங்கு இளைஞர்கள் குழுவில் இருந்த நபர் திடீரென்று மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார்.
அவர் சிக்கனை சாப்பிட்டுவிட்டு, சரியாக விழுங்காத காரணத்தினால், கடும் அவதிப்பட்டுள்ளார். அப்போது அங்கு வெயிட்டராக வேலை செய்யும், வங்கதேசத்தை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க Sheakh Rifat என்ற மாணவன், உடனடியாக அவரை, சாப்பிடும் மேஜையில் இருந்து வெளியே அழைத்து, அவரின் வயிற்றின் கீழ் பகுதியை இறுக்கி பிடித்து, அதன் பின் மேலும், கீழுமாக அசைத்தார்.
ஒரு கட்டத்தில் இதைக் கண்ட வாடிக்கையாளர்கள், பயந்து போக, ஆனால் மூச்சுத் திணறலால் சிறமப்பட்ட நபரின் வாயில் இருந்து சிக்கன் துண்டு கீழே விழுந்து, அவர் சாதரண நிலைக்கு வந்தார்.
உடனே சக வாடிக்கையாளர்கள் அவரின் இந்த செயலைக் கண்டு பாராட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், நான் வாடிக்கையாளர்களை கவனித்து வந்தேன். அப்போது குறித்த வாடிக்கையாளரிடம் ஏதோ தவறு நடப்பதைக் கண்டேன்.
ஏனெனில், அவரது முகம் சிவந்து போய், கண்களில் இருந்து தண்ணீர் வந்தது. அதுமட்டுமின்றி மூச்சிவிடமுடியாமல் சிரமப்பட்டார்.
இதனால் உடனடியாக அவரை அங்கிருந்து வெளியே இழுந்து, வயிற்றின் பின்புறத்திலிருந்து மிகவும் இறுக்கமாகப் பிடித்து, அவரை அசைத்தேன். சில முயற்சிகளுக்குப் பிறகு கோழி வெளியே வந்த பின் அவர் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கினார். அதன் பின் என்னை அவர் கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார்.
நான் சிறுவயதில் இருக்கும் போது, என்னுடைய தந்தை என்னை இப்படி செய்து தான் காப்பாற்றினார், என்பதால் அதையே நான் இங்கு செய்தேன் என்று கூறியுள்ளார்.