Loading...
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அடியெடுத்து வைத்திருக்கிறார் மலையாள நடிகர் மம்முட்டி. இவர் தற்போது ராம் இயக்கத்தில் ‘பேரன்பு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். கொடைக்கானலை பின்னணியாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் மற்றொரு அஞ்சலியும் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் பெயர் அஞ்சலி அமீர். மலையாள சினிமா உலகை சேர்ந்த அஞ்சலி அமீர் திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் திருநங்கைகள் நடித்திருந்தாலும், மலையாள சினிமாவில் நடித்துள்ள முதல் திருநங்கை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
21 வயதான அஞ்சலி அமீர் முதலில் மம்முட்டியுடன் இணைந்து நடிப்பதற்கு மிகவும் தயங்கியுள்ளார். பிறகு, தனது பாசிட்டிவான அணுகுமுறையால் இவரது பயத்தை போக்கி நடிக்க உதவியுள்ளார். மேலும், சினிமா குறித்த சில விஷயங்களையும் அஞ்சலிக்கு கற்றுக் கொடுத்துள்ளார் மம்முட்டி.
Loading...