Loading...
பாகற்காய் என்று கூறினால் முகம் சுளிப்பவர்கள் தான் இன்று ஏராளம் உள்ளார்கள். ஏனெனில் அதற்கு காரணம் அதனுடைய கசப்புத் தன்மை கொண்ட சுவை தான்.
ஆனால் பாகற்காயில் விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற ஏராளமான சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
Loading...
எனவே தினமும் காலையில் பாகற்காயை ஜூஸ் செய்து ஒரு டம்ளர் குடித்து வந்தால், நம்மை தாக்கும் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் மறைந்துவிடும்.
- 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் ஏற்படாது.
- பாகற்காய் அல்லது அதன் இலைகளை தண்ணீரில் வேக வைத்து அதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கச் செய்யும்.
- பாகற்காயை ஜூஸ் செய்து மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, ரத்தத்தில் மற்றும் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
- தினமும் சரியான முறையில் உணவுகளை சாப்பிடாவிட்டால் பலவிதமான நோய்கள் தொற்றிக் கொள்ளும். எனவே இதற்கு சீரான முறையில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்புகள் மற்றும் பசியை அதிகரிக்கச் செய்கிறது.
- பாகற்காய் ஜூஸ், கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பாகற்காயில் இருக்கும் புற்றுநோய் எதிர்ப்பி, கணைய புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியை தடுக்கச் செய்கிறது.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு கப் பாகற்காய் ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை ஜூஸை கலந்து குடித்து வந்தால், நமக்கு ஏற்படும் அழற்சி போன்ற தோல் தொடர்பான பிரச்னைகளை வராமல் தடுக்கிறது.
- பாகற்காயில் இருக்கும் பீட்டா-கரோட்டின் மற்றும் விட்டமின்கள், நமது கண் தொடர்பான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இது விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
Loading...