பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஸ்ரீபைரவர் கோயிலானது, 9 ஆலயங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது என்று செட்டிநாட்டு மக்கள் கூறுகின்றார்கள்.
இந்தக் கோயிலின் சிறப்பம்சமே ஸ்ரீபைரவரின் தரிசனமாக உள்ளது.
ஸ்ரீபைரவரை வைரவர் என்றும் அழைப்பார்கள். ஏனெனில் தேவாதி தேவர்களால் வெல்ல முடியாத வல்லமை பெற்றிருந்தான் சம்பகாசுரன்.
அவனை, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஸ்ரீபைரவ மூர்த்தி வதம் செய்தார்.
இதை நினைவுகூரும் வகையில் வருடம்தோறும் ஐப்பசி மாதத்தில், சம்பகா சஷ்டி விழா இங்கே கொண்டாடப்படுகிறது.
எனவே பில்லி- சூனியத்தில் இருந்து விடுபடுவதற்கு, பல வருடம் பழமை வாய்ந்த ஸ்ரீவெளி கண்ட நாதர் திருக்கோவிலில் மிளகாய் வழிபாடு செய்தால், விரைவில் நன்மை கிடைக்கும்.
ஆலயத்தில் அற்புதமாகத் தரிசனம் கொடுக்கும் ஸ்ரீபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகிறது.
எனவே ஸ்ரீபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் அந்நாளில் கலந்து கொண்டு மனதார வழிபட்டு வந்தால், நமது வாழ்க்கையின் கஷ்டங்கள் குறையும்.
ஸ்ரீபைரவரிடம் பிரார்த்தனை செய்து, அது நிறைவேறியதும் சிறு துணியில் மிளகாயை மூட்டை போல் கட்டி, மாலையாகச் சார்த்தி, நேர்த்திக்கடனைச் செலுத்தி, ஐந்து வகை எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பில்லி – சூனியம் முதலான ஏவலில் இருந்து விடுபடலாம்.
மேலும் நமது வாழ்க்கையின் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.