மக்கள் எப்போதும் தங்கள் எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்களில் முக்கியமான ஒன்று அவர்கள் யாரை திருணம் செய்து கொள்வார்கள் மற்றும் அவர்களின் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதாகும். திருமண வாழ்க்கைப் பற்றிய கனவு இயற்கையாகவே அனைவரிடமும் இருக்கும்.எதிர்காலம் என்ன என்பதை அறிந்து கொள்வது சாத்தியமற்றது, ஆனால் நம்முடைய ஆளுமைகளை ஆராய்ந்து வரையறுக்கும் ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் நம் திருமணம் எப்படி இருக்கும் என்று கணிப்பது கிட்டத்தட்ட சாத்தியமாகும். இதைக் கருத்தில் கொண்டு, உங்கள் ராசிப்படி எதிர்காலத்தில் உங்கள் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசி தம்பதியர் ஒருவருக்கொருவர் போட்டியிடுவார்கள், ஏனென்றால் தனிநபர்களாக, அவர்கள் எப்போதும் வெற்றிக்கான வழிகளைத் தேடுகிறார்கள். திருமணத்தில் பிணைக்கப்பட்ட, இந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இருக்கும்போது நம்பமுடியாத வலிமையைக் காண்பிப்பார்கள், அதேசமயம் தங்களுக்குள் இருக்கும் காதலையும் எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்களும் அவர்களின் துணையும் மகிழ்ச்சியான, நிலையான திருமண வாழ்க்கையை அனுபவிப்பார்கள். அவர்கள் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ விரும்புகிறார்கள், அது அவர்களின் பிணைப்புக்கு நல்லது. இவர்களும் இவர்களின் துணையும் ஒருவருக்கொருவர் தேவைப்படும்போது ஆதரவாக இருப்பார்கள். இதுதவிர, அவர்கள் தொடர்ந்து புதிய விஷயங்களை முயற்சிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள்.
மிதுனம்
வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தகவல்தொடர்புகளை சீராக வைத்திருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக இவர்கள் திருமண வாழ்வில் உற்சாகம், சிரிப்பு மற்றும் அன்பு நிறைந்திருக்கும், ஏனெனில் இவர்களுக்கு மற்றவர்களை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருப்பது எப்படி என்று நன்கு தெரியும்.
கடகம்
இந்த ராசிக்காரர்கள் அவர்களின் திருமண வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள், உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் கவனிப்பு தவிர, ஆர்வமுள்ள விஷயங்களைச் செய்வது அவர்களின் துணையையும் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். திருமண வாழ்வில் குடும்பத்தின் முக்கியத்துவம் என்னவென்று உணர்ந்து ஒற்றுமையாக இருப்பார்கள்.
சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் மிகவும் வியத்தகு மற்றும் உணர்ச்சிபூர்வமான திருமணத்தைக் கொண்டிருப்பார்கள், அவர்களும் அவர்களது கூட்டாளியும் பிரச்சினைகள் மற்றும் கருத்துகளைப் பற்றி வெளிப்படுத்துவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார்கள். மிகுந்த ஆர்வமும் அன்பும் அவர்கள் இல்லற வாழ்வில் நிறைந்திருக்கும், ஆனால் சில சமயங்களில், உறவில் சக்திவாய்ந்தவர் யார் என்பதில் அவர்களுக்குள் மோதல் எழலாம்.
கன்னி
இவர்களும் இவர்களின் வாழ்க்கைத்துணையும் தங்கள் திருமண விஷயத்தில் அனைத்திலும் கவனமாக இருப்பார்கள். இதனால் அவர்களுக்குள் விவாதங்கள் மற்றும் சண்டைகள் மிகவும் குறைவாகவே இருக்கும். பிரச்சினைகளால் ஒருவருக்கொருவர் தங்கள் திருமண இன்பத்திலிருந்து அடிக்கடி தடம் புரண்டாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் ஆதரவாக இருப்பார்கள்.
துலாம்
கூட்டாண்மை, அன்பு மற்றும் திருமணத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையில் சரியான சமநிலையை கடைபிடிக்க துலாம் ராசிக்காரர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இவர்கள்திருமணம் செய்து கொள்ள சிறந்த நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார்கள். அவர்களின் நீதி உணர்வு மற்றும் அமைதியான நடத்தை எந்த சூழ்நிலையிலும் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
விருச்சிகம்
இவர்களின் திருமண வாழ்க்கையில் அதிக நெருக்கம் மற்றும் ஆர்வம் நிறைந்திருக்கும். பல வருடங்கள் கடந்த பின்னரும், திருமணத்தில் அன்பையும் நெருப்பையும் உயிரோடு வைத்திருப்பதில் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும், பொறாமை, பொஸசிவ் மற்றும் கட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் இருக்கலாம், இவை இவர்களின் திருமண உறவில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
தனுசு
தனுசு அவர்களின் திருமண வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், ஏனென்றால் அவர்களுக்கு திருமணத்தை உற்சாகமாகவும் புதியதாகவும் வைத்திருப்பது எப்படி என்று நன்கு தெரியும் அவர்கள் எப்போதும் மேலும் தெரிந்து கொள்ளும் தேடலில் இருக்கிறார்கள், இது அவர்களை ஆர்வமாகவும் உற்சாகமாகவும் ஆக்குகிறது. ஆனால், இந்த அடையாளம் வெளியே அலைந்து திரிவதற்குப் பதிலாக, அவர்களின் வீட்டில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்
திருமண வாழ்வை அவ்வப்போது புதுப்பிக்க இவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். மகர ராசிகள் எப்போதுமே தங்கள் வேலையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கடினமாக நேசிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்திற்கான திட்டமிடலை அவர்கள் விரும்பினாலும், அவர்கள் திருமணத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
இந்த ராசிக்காரர்கள் திருமணத்தை ஆழ்ந்த நட்பு மற்றும் புரிதலின் பிணைப்பாக கருதுகிறார்கள், மேலும் இந்த வெளிப்பாடு அவர்களின் திருமண பிரச்சினைகளை கையாள்வதை எளிதாக்குகிறது. அவர்கள் வேடிக்கையானவர்கள், நகைச்சுவையானவர்கள், ஒன்றாக வாழ்க்கையை எப்படி கழிப்பது என்பது நிச்சயமாகத் தெரியும். இவை அனைத்தையும் தவிர, அவர்கள் தங்கள் கூட்டாளருக்கும் தமக்கும் மிகவும் தேவைப்படும் தனிமையான நேரத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மீனம்
தங்கள் திருமண வாழ்க்கையை கனவு வாழ்க்கைப் போல வாழ்வதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் இவர்கள் செய்வார்கள். அவர்கள் தங்கள் சொந்த கற்பனை உலகில் வாழ விரும்புகிறார்கள், மேலும் தங்கள் துணையையும் அதில் இழுக்கிறார்கள். அவர்களின் திருமணம் மிகவும் இனிமையாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும், ஆனால் அவர்கள் திருமணத்தின் உண்மையான பிரச்சினைகளை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். அவர்களின் கற்பனை உலகில் மறைந்திருப்பது திருமணத்தில் நிலுவையில் உள்ள சிக்கல்களை தீர்க்காது.