Loading...
அதிகளவில் ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்திய 34 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கொன பிரதேசத்தை சேர்ந்த ஹேவா தேவகே சனோஜா கல்ஹாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தாயான இந்த பெண், கணவனை விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Loading...
இவர்கள் இருவரும் கடந்த 17 ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரை தொடர்ந்தும் ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளதுடன் இதன் பின்னர் அந்த பெண் சுகவீனமுற்றுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலும் அவர் உயிரிழந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...