முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர். மேலும் சசிகலா, முதலமைச்சராக வரவேண்டும் என அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதைதொடர்ந்து ஏற்கனவே ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளது. அதில் போட்டியிடும்படி சிலர், வற்புறுத்தினர். சில எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகவும், அந்த தொகுதியில் சசிகலா போட்டியிட வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, அதிமுக தொண்டர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் அவரது வீட்டின் முன்பு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும், தீபாவுக்கு ஆதரவாக பேரவைகளும் தொடங்கப்பட்டு, தீவிர உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலும் தீபா பேரவை என்ற பெயரில் கட்அவுட், போஸ்டர், பேனர்களை வைத்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதியில் தீபா போட்டியிடுவர் எனவும் இதற்காக தற்காலிக சின்னம் சேவல் எனவும், விரைவில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும்,விரைவில் நடைபெற உள்ள இடை தேர்தலில், தீபா களம் இறங்குவார் என அதிமுக தொண்டர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் விருகம்பாக்கம் பகுதியில் தீபா பங்கேற்க இருந்த கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் மண்டபம் மறுக்கப்பட்டது.இதனால் தொண்டர்கள் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா போன்ற உருவ சாயலை கொண்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் ரத்த உறவு இவர் மட்டும் தான் என கூறி தொண்டர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர். தற்போது ஜெயலலிதா போல் தீபா அவரது உடை,மற்றும் சிகை அலங்காரத்தில் மாற்றம் காணப்பட்டது.
ஜெயலலிதாவிற்கு மிகவும் விருப்பமான பச்சை நிற புடவையணிந்து தீபா புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் தீபா அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டு அதிமுக தொண்டர்களின் ஆதரவு தீபாவிற்கு அளித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் உருவாக்கி ஜெயலலிதால் வழிநடத்தப்பட்ட அதிமுக கட்சியின் தொடர்ந்து தீபா வழி நடத்த தொண்டர்கள் அழைக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமியை கட்சியின் எந்த ஒரு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலும் இல்லாதவர்கள் எல்லாம் அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.
இதற்கு தீபா ஆதரவாளர்கள் முனுசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நாளை கொண்டாப்படுவதால் தனது முடிவை தீபா அறிவிக்க இருக்கிறார். அத்துடன் தீபாவை அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.