வாட்ஸ்அப் இந்த மாத தொடக்கத்தில் அதன் ஆண்ட்ராய்டு பீட்டா பயன்பாட்டை பயன்படுத்தும் பயனர்களுக்கு பிளேபேக் வேகத்தை மாற்றும் அம்சத்தை வெளியிட தொடங்கியது. இப்போது, நிறுவனம் இந்த அம்சத்தை எல்லோருக்குமான பயன்பாட்டிலும் வெளியிடத் தொடங்கியுள்ளது.
பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் பயன்பாடு அதன் மொபைல் பயன்பாடுகளுக்கு மாறுபட்ட வேகத்தில் குரல் செய்திகளை இயக்குவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது. பயனர்கள் மூன்று வெவ்வேறு வேகத்தில் குரல் செய்திகளைக் கேட்கலாம், இதில் சாதாரண வேகம், 1.5x வேகம் மற்றும் 2x வேகம் என மூன்று வேகத்தில் வாய்ஸ் மெசேஜ்களை இயக்கலாம். இந்த அம்சத்தைப் பயன்படுத்த, அனைத்து பயனர்களும் செய்ய வேண்டியது, பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பை தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்குவதுதான்.
இந்த அம்சத்தை அதன் மொபைல் பயன்பாடுகளுக்கு வெளியிடுவதைத் தவிர, மெசேஜிங் பயன்பாடும் இந்த அம்சத்தை அதன் web அடிப்படையிலான தளமான Whatsapp Web க்கும் வெளியிட்டுள்ளது. அதன் மொபைல் பயன்பாட்டைப் போலவே, வாட்ஸ்அப் வெப் பயனர்களும் மூன்று வெவ்வேறு வேகத்தில் வாய்ஸ் மெசேஜ்களைக் கேட்க முடியும். இது வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் பதிப்பு 2.2119.6 இல் கிடைக்கிறது.
இது தவிர, வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாடுகளின் பீட்டா பதிப்பில் அகதிகளுக்கான தேசக் கொடிகளையும் வெளியிட்டுள்ளது. அகதிகளை ஆதரிப்பதற்காக உலகை ஒன்றிணைப்பதை இந்த கொடி ஈமோஜி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதுப்பிப்பு iOS பதிப்பு 2.21.110.10 க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும், ஆண்ட்ராய்டு பதிப்பு 2.21.11.10 க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும் மட்டுமே கிடைக்கிறது.