ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பின் தூதுவராக நடிகை த்ரிஷா இருப்பதால் அவர் படப்பிடிப்பில் சிலர் தாக்குதல் நடத்தினர். இதை எதிர்த்து அவர் இப்படி செய்பவர்கள் தமிழர்களாக இருக்கமுடியாது என காட்டமாக பேசினார்.
பின்னர் சில கருத்துக்களையும் அவர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இந்த கருத்தை தான் தெரிவிக்கவில்லை எனவும் தனது ட்விட்டர் கணக்கு ஹாக் செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். எனினும் இதை ஏற்க மறுக்காத ரசிகர்கள், இவர்மீது சமூக வலைத்தளங்களில் தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து அவர் தற்போது தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்துவிட்டு வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷை வைத்து அடங்காதே எனும் படத்தை இயக்கிவரும் இயக்குனர் ஷண்முகம், ” தமிழகத்தை விட்டு வெளியேறு குடிகாரி” என ட்வீட் செய்துள்ளார். பின்னர் அதை தனது பக்கத்தில் இருந்து அவர் நீக்கிவிட்டார்.