மத்தள விமான நிலையத்திலிருந்து வாராந்தம் எட்டு விமானங்கள் சீனாவிற்கு பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடு தளம் பகல் வேளைகளில் எட்டு மணித்தியாலங்கள் மூடப்பட்டுள்ளதனால் மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படுவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படிää காலை 7.25 மற்றும் 7.35 ஆகிய நேரங்களில் சீனாவின் பெய்ஜிங் மற்றும் சங்காய் ஆகிய நகரங்கள் நோக்கிப் பயணிக்கும் விமானங்களை மத்தளவில் தரையிறக்கி மூன்று மணித்தியாலங்களின் பின்னர் மீளவும் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணப்படும் அதிக நெரிசல் காரணமாக இவ்வாறு மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால தாமதம் ஏற்படும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புனரமைப்பு பணிகளுக்காக ஜனவரிமாதம் 6ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5ம் திகதி வரையில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.