கனடாவில் ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேரலையில் சிறுநீர் கழித்து முகம் சுழிக்க வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் பல நாடுகளில் நாடாளுமன்ற அவைக் கூட்டங்கள் நேரலையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கனடாவில் நடந்த உத்தியோகப்பூர்வ கூட்டத்தில் ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான William Amos, தேநீர் கிண்ணத்தில் சிறுநீர் கழித்து அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளார்.
இதே உறுப்பினரே, கடந்த வாரம் நேரலையின் போது நிர்வாணமாக தோன்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். இந்த நிலையில் தமக்கு உதவி தேவைப்படுவதாக கூறி, அவை நடவடிக்கையில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஆனால் எத்தகைய உதவி அவர் கோருகிறார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. மேலும், தாம் தொடர்புடைய அந்த இருவேறு சம்பவங்களும் தற்செயலான விபத்து என்றே William Amos விளக்கமளித்துள்ளார்.
கமெரா செயல்பாட்டில் இருப்பதை தாம் கவனிக்கவில்லை என்றும், தமது நடவடிக்கைகள் எவரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற செயலாளராக தனது பங்களிப்பிலிருந்தும், தனது குழு கடமைகளிலிருந்தும் தாம் தற்காலிகமாக ஒதுங்குவதாகவும், இதனால் உரிய உதவிகளை பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.